மனசு ரொம்ப வலிக்குது... மஞ்சள் கயிறுடன் எதிர்நீச்சல் ஆதிரை வெளியிட்ட காணொளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகை வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்தில் நடிகை சத்யா தேவராஜன் நடித்து வரும் நிலையில், இவருக்கு சீரியலில் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
பல மாதங்களாக ஆதிரையின் காதல் கதையும், அதனால் ஏற்படும் பிரச்சினை என்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் நடுரோட்டில் வைத்து கரிகாலன் ஆதிரைக்கு தாலி கட்டியுள்ளார்.
குறித்த நடிகை ஆரம்பத்தில் ரசிகர்களால் சற்று வெறுக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஆம் தனது அண்ணன் உடன் சேர்ந்து கொண்டு வீட்டில் இருந்த பெண்களை அவமானம் செய்யும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்தார்.
பின்பு தனது காதலுக்கு வீட்டில் இருக்கும் அண்ணிமார்கள் அனைவரும் ஆதரவு அளித்த பின்பு அவர்கள் வைத்த பாசத்தினை புரிந்து கொண்டு மனம் மாறியுள்ளார்.
ஆதிரை தான் காதலித்த அருணை திருமணம் செய்வாரா? அல்லது அண்ணன் பார்த்து வைத்த கரிகாலனை திருமணம் செய்வாரா என்று எதிர்பார்த்த தருணத்தில் இந்த திருமணம் நடுரோட்டில் வைத்து நடைபெற்றுள்ளது.
இது ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியதோடு, கதையில் தவறு செய்துவிட்டதாக தனது ஆதங்கத்தையும் கொட்டியுள்ளனர்.
ஆனாலும் இனி ஆதிரை தனக்கு பிடிக்காத திருமணத்திலிருந்து எப்படி வெளியே வந்து தன்னுடைய திறமையை தானாக நிரூபிக்க போகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதையாக இருக்கப் போகிறதாம்.
ஆதிரை வெளியிட்ட காணொளி
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து குறித்த மேக்கப்பில் ரீல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் கழுகு திரைப்படத்தில் இடம்பெற்ற "கிட்ட வந்து நீயும் பேசு" என்ற வரிகளுக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து இருக்கிறார்.
இதில் அவர் சாதாரண புடவையுடன் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் இருப்பதை பார்த்து பீல் பண்ணிய ரசிகர்கள் அதை கழட்டி வைத்துவிட்டு இந்த வீடியோ எடுத்திருக்கலாம்.... அந்த தாலியை பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்குது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு குறித்த நடிகை இமோஜியை அனுப்பி ஃபீல் பண்ணி இருக்கிறார்.
வைரலாகி வரும் இந்த காணொளியினை தொடர்ந்தும், நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க அக்கா... நீங்க கோர்ட்டுக்கு போகலாம்.. கரிகாலனை சீச்சிரம் விவாகரத்து பண்ணிடுங்க... படித்த படிப்புக்கு சீக்கிரம் வேலையை பாருங்கள் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |