ஆதிரைக்கு தாலி கட்டியது கரிகாலனா? அருணா? ஒட்டுமொத்த ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி தான் ஆதிரையின் திருமணம் இந்த திருமணத்தில் ஆதிரைக்கு தாலிகட்டியது யார் என்று குழப்பும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
ஆதிரைக்கு கல்யாணம்
இந்த சீரியலில் அனைவரையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது ஆதிரையின் திருமணம் தான். ஆனால் இந்த அனைவரையும் ஏமாற்றிய காட்சிதான் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் நடந்த திருமணம்.
கரிகாலனை ஏமாற்றிவிட்டு ஆதிரைக்கு அருணை கல்யாணம் செய்து வைப்பதற்காக வீட்டில் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு ஜனனி, ரேணுகா, நந்தினி ஆதிரையுடன் சென்ற வேளையில் குணசேகரன் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |