எதிர்நீச்சல் சீரியலில் ஜான்ஸி ராணியாக நடிக்கும் காயத்திரி யார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஜான்ஸி ராணி என்ற கதாப்பாத்திரம் பலருக்கு பிடித்தமான ஒன்றுதான்.
இவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
எதிர்நீச்சல் ஜான்ஸி ராணி
எதிர்நீச்சல் சீரியலில் வாயில் வெற்றிலையைப் போட்டுக் கொண்டு ஆதிகுணசேகரனுக்கு போட்டியாக சண்டைக்கு அழையும் கதாப்பாத்திரம் தான் ஜான்ஸி ராணி என்கிற காயத்திரி கிருஸ்ணன்.
இவர் கரிகாலனின் அம்மாவாக நடித்திருக்கிறார். காயத்திரி கிருஸ்ணனுக்கு தற்போது 60 வயதைக் கடந்து விட்டது. இவர் ஒரு தொகுப்பாளர் ஆவார்.
இவர் இதற்கு முன்னர் அண்மையில் வெளியான அயலி திரைப்படத்திலும் நடித்திருந்ததார். அதுமட்டுமல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு சிறுவயதில் இருந்து டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்பது மிகப் பெரிய ஆசையாம். இடையில் திருமணம் முடித்து விட்டு பிஹெச்டி பட்டம் பெற்று இருக்கிறார். அதுவும் பி ஹெச் டி யில் திருநங்கைகளின் வாழ்க்கைகளை குறித்து ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார்.
படித்துக் கொண்டே இரண்டுப் பிள்ளைகளுக்கு தாயாகினார். படிப்பு முடித்ததும் மாடலிங் பக்கம் சென்று அதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
பிறகு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று போகும் போது தான் உருவக் கேலிகளுக்கு ஆளாகியிருக்கிறார். இதை எதையும் கண்டுக் கொள்ளாமல் முன்னேறி இருக்கிறார் காயத்திரி.
அதுமட்டுமில்லாமல் அரசியலில் ஆர்வம் அதிகம் இருப்பதாகவும் அடுத்து அரசியலில் சேர்ந்து திருநங்கைகளுக்கு உதவ வேண்டும் என்பது இவரின் ஆசையாகும். அவர் இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தகவல்களையும் பியூட்டி டிப்ஸ்களையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்த காணொளி இதோ,