சில மணிநேரத்தில் குழந்தை இறந்துவிடும்! மருத்துவர்கள் கொடுத்த ஷாக்: பிரபல நடிகை வாழ்வில் நடந்த சோகம்
பிரபல நடிகை கனிகா குழந்தை பெற்றெடுத்த போது, அவரது குழந்தை சில மணி நேரத்தில் இறந்துவிடுவதாக கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி கொடுத்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகை கனிகா
முந்திய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கனிகா அஜித்திற்கு ஜோடியாக வரலாறு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தார்.
இவர் முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலே ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கனிகா தனக்கு குழந்தை பிறந்த போது நடந்த சம்பவம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இவரது குழந்தைக்கு என்ன?
இது குறித்து பேசிய அவர் “நான் கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அனைத்து ஆரோக்கியமான விஷியங்களையும் செய்து வந்தேன்.
மருத்துவர்களும் குழந்தை நன்றாகவே இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் எனக்கு குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது.
சில மணி நேரம் தான் உயிரோடு இருப்பார் என்றார்கள். வாழ்க்கையே எனக்கு இருண்டுவிட்டது. அதன்பின் எப்படியோ போராடி குழந்தையை காப்பாற்றினோம்” என்று கூறியுள்ளார்.