ஜீவானந்தம் கேரக்டரில் இருந்து விலகுகிறாரா இயக்குனர்? அப்போ சீரியலின் கதி...
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஜீவானந்தமாக நடிக்கும் இயக்குனர் தற்போது திடீரென விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை கட்டுப்படுத்தி அவர்களை அடிமையாக்கி நடத்தும் ஒரு கதைக்களமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
விலகும் இயக்குனர்
சீரியலில் தற்போது புதிய புதிய திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இயக்குனர் சீரியல் குறித்து சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சீரியலில் ஜீவானந்தமாக நடித்து வரும் இயக்குனர் திருச்செல்வம் இனி அந்த ரோலில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனெனில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தை சில நாட்கள் மட்டும் தான் கொண்டு போகலாம் என்று தான் எடுத்திருக்கிறார் ஆனால் இப்போது கதையின் முக்கியத்துவத்தை நோக்கி இந்த கதாபாத்திரம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இனி கதை நகர நகர ஜீவானந்தம் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள் ஆனால் அதுவும் இன்னும் அதிக நாட்களுக்கு இந்த ரோல் இருக்காது என அவரே கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |