எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரம் திடீர் விலகல்: இதுதான் காரணமா?
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரம் திடீரென விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
சீரியலை விட்டு விலகும் பிரபலம்
சீரியலில் தற்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று மக்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த சீரியலில் நன்கு பரிட்சயமான நடிகர் ஒருவர் சீரியலில் இருந்து விலகப் போவதாக அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் ஆதிரையின் காதலனாக நடித்து வரும் அருண் தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
சீரியலில் தனது கதைக்கும் கதாப்பார்த்திரத்திற்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |