குணசேகரனின் அம்மாவிற்கு இப்படி சோகமா?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அம்மாவாக நடித்து வரும் சத்தியப்பிரியாவின் சோகமான பின்னணி இதுதான்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் இருக்கும் ஆதிகுணசேகரன் தான் அனைத்துப் பெண்களையும் அடிமைப்போல் நடத்துகிறார்.
அதனால் சீரியல் பார்ப்பவர்கள் எல்லாம் அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நான்கு அண்ணன் தம்பிகள், இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டார்கள்.
இந்த அண்ணன் தம்பிகளுக்கு தாயாராக நடிப்பவர் தான் சத்யப்பிரியா இவர் தன் வாழ்வில் சந்தித்த சோகமாக பல தகவல்களை பகிரந்திருக்கிறார்.
விசாலாட்சியின் மறுபக்கம்
விசாலாட்சியாக நடித்து வரும் சத்தியப்பிரியா பல படங்களில் நாயகியாக நடித்து பிரபல்யமானவர். இவர் 1979 ஆண்டு கன்னட தயாரிப்பாளர் முகுந்தன் என்பரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியவர் ஒரு மகனுக்கும் அடுத்து 5 வருடங்களிற்குப் பிறகு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
காலம் செல்ல செல்ல இவரின் கணவன் முகுந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வறுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் அந்த சமயத்தில் தெலுங்கு படங்களுக்கு டப்பிக் கொடுக்க ஆரம்பித்து மீண்டும் சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி தன் கணவருடன் வாழ்க்கையைக் கொண்டுப் போய்கொண்டிருந்த சத்தியப்பிரியாவின் வாழ்வில் பெரிய சோகம் ஒன்று நிகழ்ந்தது 1987ஆம் ஆண்டு தான் காதலித்து கரம்பிடித்துக் கொண்ட சந்தியப்பிரியாவின் கணவன் திடீரென உயிரிழந்தார்.
இந்தக் கவலையில் இருந்து மீண்டு வர முடியாமல் இருந்த சத்தியப்பிரியா மீண்டும் சீரியல்களில் நடிப்பதன் மூலம் ஆறுதல் தேடினார். அதுதான் இவரை விசாலாட்சியாக கொண்டாட வைத்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |