தவறாமல் சாப்பிடுங்க.. கிவி பழம் ஆண்களுக்கு உதவி- பிரச்சனையே வராது!
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
உணவினால் ஏற்படும் இந்த நோய்களை அதே உணவால் கட்டுபாட்டில் கொண்டு வர முடியும் என்றால் நம்ப முடிகிறதா? பெண்களை விட ஆண்கள் தவறான வாழ்க்கை முறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டால் கூட தற்போது உள்ள ஆண்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. என்ன தான் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் போன்று இருந்தாலும் சாதாரண காய்ச்சல் வந்தாலும் படுத்து விடுவார்கள். இதுவே தற்போதைய ஆண்களின் நிலையாக உள்ளது.
திருமணமான தம்பதிகளில் பலர் மலட்டுத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுவார்கள். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழலாம் என சென்ற இடத்தில் இது போன்ற கோளாறுகள் இருந்தால் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.
இதனால் மன அழுத்தம், குடும்பத்திற்குள் பிரச்சினை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் புதிதாக உருவெடுக்கலாம்.
அந்த வகையில் ஆண்களுக்கு வரும் மலட்டுத்தன்மை பிரச்சினையை பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும் கிவி பழம் சரிச் செய்கிறது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி கிவி பழத்தில் என்ன இருக்கிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆண்களுக்கு உதவிச் செய்யும் கிவி பழம்
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்கும் இந்த பிரச்சினைக்கு கிவி பழம் உடனடி நிவாரணம் கொடுக்கிறது. பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும் இந்த கிவி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆண்களுக்கு கருவுறுதல் திறனை மேம்படுத்துகிறது. அத்துடன் கிவியில் ஜிங்க், ஃபோலேட் போன்றன உள்ளன. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகப்படுத்தி ஆண்களின் ஆற்றலை அதிகப்படுத்தும்.
இவர்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மையை இல்லாமல் செய்து விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து கருத்தரிப்பு வாய்ப்புகளையும் கொடுக்கிறது.
NCBI ஆய்வின் முடிவில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணு தரத்தை மேம்படுத்துகிறது. அதே சமயம், கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தங்களை குறைப்பதால் ஆண்களுக்கு பெரிதாக பாதிப்பு இல்லாமல் போகும்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களை மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் மலட்டுத்தன்மை இல்லாமல் போகும். இதுவே எந்தவித சிகிச்சையும் இல்லாத எளிய வழிமுறை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |