அட அஜித் உடம்பில் இப்படியொரு விநோதமான பிரச்சினையா? என்ன காரணம்?
நடிகர் அஜித் குமாரை் சமீபத்திய பேட்டியொன்றில் தனக்கு இருக்கும் விநோதமான ஆரோக்கிய பிரச்சினை குறித்து பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்று வருகின்றது.
நடிகர் அஜித்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.
அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது.
தற்போது அஜித், துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அஜித் பேட்டி அளித்துள்ளார்.
அஜித் ஓபன் டாக்
குறித்த பேட்டியில் அஜித் குறிப்பிடுகையில், எனக்கு திரைப்படங்கள் வெப் சீரியஸ்கள் பார்க்க நேரம் கிடையாது, விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே எனக்கு தூங்க நேரம் கிடைக்கிறது.
அதுமட்டுமில்லாமல் எனக்கு தூக்கப் பிரச்சனையும் உள்ளது, எனக்கு தூங்குவதற்குச் சிரமமாக இருக்கும். அப்படியே தூங்கினாலும், அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குவேன் என்று கூறியிருக்கிறார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தூக்கக் கோளாறு ஏற்பட முக்கிய காரணங்கள்
பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் போதியளவான தூக்கம் பெரும் பங்கு வகிக்கின்றது.
பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சிகைகளுக்கு முக்கிய காரணமாக தூக்கமின்மை பிரச்சினை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலும் நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் அதிகமுள்ளவர்களுக்கு, இந்த தூக்க கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் மரபணு காரணிகளாலும் தூக்கக் கோளாறு ஏற்படலாம்.
ஏதேனும் சில மருந்துகளின் பக்க விளைவும் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி, இதய நோய்கள், ஆஸ்துமா, உடல் வலி, நரம்பு மண்டலக் கோளாறுகள் ஆகியவற்றாலும் தூக்கக் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சராசரியாக 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் இன்றியமையாதது. எனவே தூங்குவதில் சிரமம் இருப்பவர்கள் அவசியம் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |