40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?
IVF சிகிச்சை செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பாவனா ராமண்ணாவின் டயட் பிளான்களை பற்றி தெரிந்து கொள்ள இணையவாசிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாவனா ராமண்ணா
கன்னட சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் பாவனா ராமண்ணா.
இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு மாரிபேல் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அதன் பின்னர், லக்கேஷா, எல்லோரா மனே தோசேனு, குறிகலு சார் குறிகலி, பர்வா , ஷமா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கன்னட சினிமா போன்று தமிழ் சினிமாவிலு சில படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் பாவனா ராமண்ணா குழந்தை பெற்றுக் கொள்ளும் செய்தி இணையவாசிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
IVF சிகிச்சை
IVF சிகிச்சை மூலம் கர்ப்பமாகிய நடிகையின் உடல் எப்படி இந்த வயதில் கர்ப்பத்தை தாங்குகிறது என பலருக்கும் சந்தேகம் இருந்தது. IVF சிகிச்சை என்பது IVF சோதனைக் குழாய் கருத்தரிப்பு என அழைக்கப்படுகிறது.
இது கருவுறுதல் சிக்கல்களை கொண்ட தம்பதிகளுக்கு செய்யும் சிகிச்சையாகும். முட்டைகளை ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்க வைத்து, அதன் பின்னர் கருவை வளர்ப்பது இந்த சிகிச்சையின் முக்கிய விடயமாகும். கருப்பை தூண்டுதல், முட்டைகளை சேகரித்தல், விந்தணுவுடன் கருத்தரித்தல் மற்றும் உருவான கருவை தாயின் கருப்பையில் பதித்தல் உள்ளிட்ட செயன்முறைகள் அடுத்தடுத்து நடக்கும்.
40 வயதை கடந்த நடிகை, IVF சிகிச்சை செய்வது சாத்தியமானதா? என பலரும் சந்தேகம் இருக்கும். இது குறித்து The Fertility Gynaecology Academy-யின் படி அந்த பெண் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றும் அவருடைய கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
IVF சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மருந்துகளை தாங்கும் சக்தி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்ணிற்கு இருக்க வேண்டும். சாதாரணமான கர்ப்பம் போன்று அல்லாமல் இந்த சிகிச்சையின் போது பெண்ணின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை முற்றாக மாறும்.
IVF கர்ப்பத்தை தாங்கும் பெண்கள் புரதச்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
உதாரணமாக முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போன்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் நட்ஸ், பெர்ரீஸ் , கீரை வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |