ஊரே மணக்க மாங்காய் போட்ட மத்தி மீன் குழம்பு - கேரளா ஸ்டைல் ரெசிபி
மத்தி மீன் குழம்பு என்றால் அது யாருக்கு தான் பிடிக்காது. மிகவும் சுவையான மீன்களில் மத்தி மினும் ஒன்று. இந்த மீன் கேரளா பகுதிகளில் மிகவும் சுவையாக சமைப்பார்கள்.
மத்தி மீனில் வைட்டமின் டி, பி2, பி12, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது உடலுக்கும் முக்கியமாக கண்களுக்கும் மிக நன்மையான பல விடயங்களை தரும். அந்த வகையில் இந்த கேரளா சுவையில் மத்தி மின் குழம்பு மாங்காய் போட்டு எப்படி சுவையாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 10 மத்தி மீன்
- 1 மாங்காய்
- 3 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 5சின்ன வெங்காயம்
- ½ கப் துருவிய தேங்காய்
- 1 டேபிள்ஸ்பூன் கடுகு
- ½ டேபிள்ஸ்பூன் நல்லமிளகு
- 1 டேபிள்ஸ்பூன் வத்தல் தூள்
- 1 டேபிள்ஸ்பூன் மல்லி
- ½ டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 கப் புளி தண்ணீர்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவைக்கு உப்பு
செய்யும் முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய், ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழம்புக்கு மசாலா செய்ய இஞ்சி சாறு, அரை கப் துருவிய தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி வத்தல் தூள், அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், 5 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
இப்பொழுது நன்றாக சுத்தம் செய்து வைத்திருக்கும் மத்தி மீனோடு, மாங்காய், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து பின்பு மாங்காய், தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளி தண்ணீர், மத்தி மீன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அவ்வளவு தான் மத்தி மீன் குழம்பு மாங்காய் போட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |