அதிகாலை எழுந்தால் இம்புட்டு நன்மையா? இனி மிஸ் பண்ணிடாதீங்க
அதிகாலையில் தூங்கி எழுவது பல நன்மைகளை அளிக்கின்றது. ஆம் உடலுக்கும், மனதிற்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிகாலை எழுவதால் நன்மை
அதிகாலையில் எழும்புவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதுடன், மூளை நரம்பு இயக்கங்களும் சீராக செயல்படுவதுடன், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கின்றது.
குறிப்பாக மன அழுத்தம் குறைகின்றது. ஏனெனில் சீக்கிரம் எழுவதால் அன்றைய நாளுக்காக வேலைகளை சரியான நேரத்தில் திட்டம் போட்டு எளிதில் செய்துவிட முடியும்.
காலை வேலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கின்றது. தாமதமாக எழுந்தால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாது. சீக்கிரம் எழுவதால் பசி எடுப்பதுடன், காலையில் சாப்பிடுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் வருவது குறைகின்றது.
காலையில் சீக்கிரம் எழுவதால் இரவு 10 மணிக்குள் தானாக தூக்கம் வர ஆரம்பித்துவிடும். சரியான நேரத்தில் தூங்குவது மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராமலும், வளர்சிதை மாற்றம் சீராகவும் இருக்கும்.
மாசற்ற தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால் நுரையீரல் வலுவடைவதுடன், ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை ஏற்படாது. காலை 5.30 மணிக்கும் மூச்சுப்பயிற்சி, யோகா செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டால் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை அளிக்கும்.
அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் காலை கடன்களை முடிக்கலாம். இவை உடம்பிலுள்ள நச்சுக்கள் சீராக வெளியேறுவதுடன், சீறுநீரகம், கல்லீரல், பெருங்குடல் உறுப்புகளும் சீராக இயங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |