விஜய்யின் வீட்டிற்குப் பக்கத்தில் வீடு வாங்கிய வாரிசு நடிகர்: எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் விஜய் வசிக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் பல கோடிகளுக்கு மதிப்பிலான புதிய பிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான்
பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டியின் மகனாவார்.
இவர் 2012ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரைக்கு தன் நடிப்புத் திறமையால் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும், துல்கர் சல்மான் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படமும் சீதா ராம் திரைப்படமும் அவரின் திரைத்துறைக்கு திருப்புமுனையாக அமைந்தது.
துல்கர் வாங்கிய வீடு
இந்நிலையில் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் விஜய் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பிளாட் வாங்கியிருக்கிறார்.
விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாகவும் அந்தப் பிளாட்டுக்கு பக்கத்திலேயே ஒன்பதாயிரம் ஸ்கொயர் பீட்டில் இருக்கும் பிளாட்டை துல்கர் சல்மான் வாங்கியிருக்கிறார்.
மேலும், இதனை 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |