நடிகை சரண்யா சசி சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்- பேரதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!
மூளைக்கட்டியுடன் உயிருக்கு போராடி வந்த மலையாள நடிகை சரண்யா சசி தற்போது காலமான சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில், பச்சை என்கிற காத்து படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கேரளாவை சேர்ந்த சரண்யா சசி. அவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டில் இருந்து மூளை கட்டி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவருக்கு இதுவரை 11 முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மேலும், அவரின் அறுவை சிகிச்சைகளுக்கு முதலில் நண்பர்கள் மற்றும் மலையாள சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் நிதியுதவி செய்தது.
ஆனால்,, அவருக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை நடந்ததால் பண பிரச்சனையானது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த மே மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் நிலைமை மோசமடையவே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்ந்து, உயிருக்கு போராடிய நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் தனியார் மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்துள்ளது. இவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.