விஜே ரக்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? இணையத்தில் படு வைரலாகும் மனைவியின் புகைப்படம் இதோ...!
விஜய் டிவியில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ரக்ஷன். இவரின் தனித்துவமான பேச்சுக்களுக்கே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்ஷன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அறந்தாங்கி நிஷா உடன் குக் வித் கோமாளி சீசன் ஒன்னை தொகுத்து வழங்கி வந்தார்.
சமீபத்தில், துல்கர் சல்மானுடன் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், குக்வித் கோமாளி இரண்டாம் சீசனை சிங்கிள் ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே, நடிகர் ரக்ஷன் தற்போது ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில், பெண் ஒருவருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "என் மனைவி. சிறுவயதில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். பத்து வருடத்திற்கு முன்பு அவளுடன்" என்று கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதுவரை ரக்ஷன் திருமணம் ஆகாதவர் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் ரக்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? போன்ற கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.