என்னாது சாமிக்கு சரக்கா...! மது போத்தலை பிரசாதமாக வழங்கும் கோவில்: பின்னணி என்ன?
பொதுவாக நாம் கோயில்களுக்கு செல்லும் போது இறைவனை மனதில் நிறுத்தி கோயிலுக்கு வெளியில் பூ, பழம் என அர்ச்சனை தட்டு உள்ளே கொண்டு செல்வது வழக்கம்.
ஆனால் இந்தியாவில் ஒரு கோவிலில் அர்ச்சனைத் தட்டில் கண்டிப்பாக ஒரு மது போத்தல் இருக்க வேண்டுமாம்.
என்னாது சாமிக்கு சரக்கா...! என்ற ஆச்சரியம் தான் எல்லோருக்கும் இருக்கும்.
ஆம், இந்த கடவுளுக்கு கண்டிப்பாக மது போத்தல் வைத்தே ஆக வேண்டும் என்ற ஒரு மரபு இருக்கிறதாம். இப்படி கேட்பவர்களை ஆச்சரியப்படுத்தும் கோவில் எங்கு இருக்கிறது, இதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மது தான் பிரதாசம்
இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் பிரதேசத்தில் பழங்கால பைரவர் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் பத்ரசேசன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.
இந்த பைரவர் தான் உஜ்ஜைன் நகரின் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள். எமது சைவ மரபின் படி எட்டு பைரவர்களில் முதன்மையானவர் தான் இந்த காலபைரவர்.
சிவபெருமானின் உக்கிர ரூபமாக இருப்பவரும் அஷ்ட பைரவர்களில் மிகவும் உக்கிரமான வெளிப்பாடாகவும் இருக்கிறார் இந்தக் காலபைரவர். இந்தக் காலபைரவருக்கு நடக்கும் பூஜைகள் தான் சற்று வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
கோவிலுக்கு அருகில் மட்டுமல்ல கோவிலிருந்து முடியும் தெருவோர கடைகளில் எல்லாம் இந்த மதுபானக் கடைகளாகத் தான் இருக்கிறது.
அந்தக் கடைகளில் எல்லாம் உள்நாட்டு மது போத்தல்களிலிருந்து வெளிநாட்டு மது போத்தல்கள் வரை எல்லாம் இருக்கிறதாம்.
பூஜை முறை
இந்தக்கோவில்களில் பூஸை முறை எப்படி இருக்கும் என்றால் பூஜைப் பொருட்கள் வாங்கும் போது அந்தத் தட்டில் மது போத்தலும் இருக்குமாம்.
அந்தப் பூஜைத் தட்டை பூசகரிடம் கொடுத்தால் அவர் அந்த போத்தலைத் திறந்து பாதியை சிலையின் வாய்க்கு அருகில் ஒரு தட்டில் ஊற்றி வைப்பார்கள். அந்த தட்டில் இருக்கும் மதுபானம் மெது மெதுவான சிலையின் வாயிற்குள் சென்று விடும்.
இது எப்படி நிகழ்கிறது என்று யாருக்கும் புலப்படாத ஒரு மர்மமாக இருக்கிறது. மேலும் இந்தக் கோவிலுக்கு காணிக்கையையும் மதுபோத்தல்கள் கிடைக்கும், பிரசாதமும் மதுபோத்தல்கள் தான் கிடைக்கும்.
கோவிலில் பிரசாதமாக பொங்கல், புளியோதரை கொடுத்தது போய் மது போத்தல்களையே கொடுக்கும் ஒரே கோவில் இந்தக் கோவில்தான்.