இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா? துருக்கி பூகம்பத்தை கணித்த நிபுணர் கொடுத்த ஷாக்
துருக்கியில் நிலநடுக்கத்தினை முன்கூட்டியே கணித்து கூறிய ஆய்வாளர் ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வரும் என்று கூறியுள்ளார்.
துருக்கி நிலநடுக்கம்
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவான இதனால் துருக்கி நாடே நிலைகுலைந்து போயுள்ளது.
அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து நாடுகளிலும் இந்த நலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படை வீரர்கள் மீட்டெடுக்க போராடி வருகின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தினை 3 நாட்களுக்கு முன்கூட்டியே ஆய்வாளர் ஒருவர் கூறி எச்சரித்த நிலையில், அந்நாட்டு அரசு மெத்தனமாக இருந்துள்ளது.
ஆம் நெதர்லாந்தை சேர்ந்த ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் எனும் ஆய்வாளர் துருக்கி நிலநடுக்கம் நடக்க 3 நாட்களுக்கு முன்பாகவே இதனை கணித்துள்ளார்.
Solar System Geometry Survey (SSGEOS) எனும் ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வரும் இவர் தனது டுவிட்டரில் பதிவிட்டது மட்டுமின்றி, ரிக்டர் அளவையும் துள்ளியமாக கணித்துள்ளார்.
இந்தியாவில் நிலநடுக்கம்
இந்நிலையில், ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் இந்தியாவில் நில அதிர்வு ஏற்பட போவதாக காணொளி ஒன்றில் பேசியுள்ளார். குறித்த காட்சியிலல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏற்பட்டு அதன் விளைவுகள் பாகிஸ்தான் வழியே இந்தியா வரை ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.
பாகிஸ்தானில் மேற்கு திசை வழியே வரும் இந்த நிலநடுக்கம், இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எச்சரித்ததுடன், இந்திய பெருங்கடல் வரை இந்த அதிர்வு உணரப்படுவதாகவும் கூறியுள்ளார்.