மதுபோத்தலில் செத்துக்கிடந்த பாம்பு குட்டி... குடித்தவரின் நிலை என்ன தெரியுமா?
மது போத்தலில் இறந்து கிடந்த பாம்பினை கவனிக்காமல், நபர் மது அருந்தியதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (36). விவசாயியான இவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் எப்போதும் போல் மதுபானக்கடையில் மதுபாட்டில் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்து ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துள்ளார்.
மீதமுள்ள மதுவை இரண்டாவதாக ஊற்றும் பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு பதறியுள்ளார். மேலும் பாம்பைக் கண்ட உடனேயே அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷத்தை கூறியதால், அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.