உயிருடன் நண்டுகளை காணிக்கையாக செலுத்தும் மக்கள்! வினோதத்திற்கு பின்னணி காரணம் என்ன?
குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவ் கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தி வழிபடும் வினோதம் நடைபெற்று வருகின்றது.
நண்டுகளை படைப்பது ஏன்?
பொதுவாக இந்துக்கள் முறைப்படி கடவுளை வழிபட வேண்டும் என்றால், பால், பழம், பூ, தேங்காய், இனிப்பு வகைகள் இவற்றினை காணிக்கையாக வழங்கி தான் வழிபடுவார்கள்.
ஆனால் இங்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராம்நாத் சிவ் கேலா என்ற சிவன் கோவிலில் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாகப் படைத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளிலிருந்து நண்டு பூஜை நடைபெறும்... இவ்வாறு செய்வதால் உடலில் ஏற்படும் நோய்கள் குணமாவதுடன், குறிப்பாக காதுவலி ஏற்படாது, குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகின்றனர்.
ராமரே இந்த கோவிலை கட்டியுள்ளதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், ஏகாதசி நாளில் வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறு நண்டுகளை காணிக்கையாக பக்தர் படைத்து வருகின்றனர்