வீட்டில் தீய சக்திகளின் தொல்லை இருக்கின்றதா? சின்ன சின்ன பரிகாரங்கள் போதும்
பொதுவாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வீடுகளில் திடீரென சில மாற்றங்கள் ஏற்படுவதையும், இதற்கு பின்னே இருக்கும் காரணத்தையும் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தீய சக்திகளின் ஆதிக்கம்
பொதுவாக எந்தவொரு சண்டை சச்சரவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் வீடுகளில் அடுத்தடுத்து பிரச்சினை எழுவதும், வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் குறை ஏற்படுவதையும் நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இது தீய சக்திகளின் ஆதிக்கமாக கூட இருக்கலாம். இதன் அறிகுறிகள், முதலில் சுறுசுறுப்பற்ற நிலைமை ஏற்பட்டு, பின், கை மற்றும் கால்களில் மூட்டு வலிகள் ஏற்படும். கண்களில் எரிச்சல் மற்றும் சில பேருக்கு கண்கள் கூட சிவப்பாக மாறும். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள்.
துர்சக்திகளை விரட்ட பரிகாரம் என்ன?
நாம் சமையலறையில் பயன்படுத்தும் உப்பில் மகாலஷ்மி நிறைந்து இருப்பதாக கூறுவார்கள். அதனால் தான் உப்பு பாத்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலி செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
உப்பை வாங்கினால் கூட நல்ல நாட்களில் மட்டும் வாங்கினாலே வீட்டில் செல்வம் தழைத்தோங்கும் என்றும் சொல்வதுண்டு.
பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும், வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிய வீட்டின் வெளியில் ஒரு கிண்ணம் வைப்பதும், பரிகாரங்களின் போதும், வீட்டில் தீராத பிரச்சனைகள் இருந்தால் உப்பை வாங்கி கோவில்களில் கட்டுவதும் என்று இப்படி பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்துகிறோம்.
பிரம்ம முகூர்த்தம்
அந்த நாட்களில் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் எல்லா செயல்களுக்கும் பலன் உண்டு. தோஷமான நாளாக இருந்தாலும் பலன் உண்டு. குறிப்பாக உப்பு பரிகாரம் எப்போது செய்வதாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்குங்கள்.
குறிப்பாக புதிதாக கண்ணாடி கிண்ணம் ஒன்றை வாங்கி, நிறைய கல் உப்பை அதில் நிரப்பி, வாசற்படியில் வைத்து மறுபக்கம் அகல் விளக்கு ஒன்றை ஏற்றுங்கள்.
தினமும் இந்த கல் உப்பை மாற்ற வேண்டும். பின்னர் இதனை ஓடும் நீரில் கொட்டி விட வேண்டும். சிலர் இதை சேர்த்து வைத்து மொத்தமாக கொட்டுவார்கள்.
அப்படி இருந்தால் அந்த உப்பை வீடுகளுக்குள் கொண்டு வராமல் வெளியிலேயே வைத்திருந்து பிறகு ஓடும் நீரில் வீசி விட வேண்டும்.
இப்படி செய்வதால் வீட்டிற்குள் துர்சக்திகள் நுழையாது. வீட்டிற்குள் இருக்கு எதிர்மறை எண்ணங்கள், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகள் போன்ற அனைத்தும் அழிந்து வீட்டில் நேர்மறை சக்திகள் வளரும்.
இந்த உப்பு பரிகாரம் செய்வதன் மூலம் நமது மனதுக்குள் இருக்கும் கவலை, பொருளாதாரம் குறித்த பிரச்சனைகள், கோபம், எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தம், கஷ்டம் ஆகிய அனைத்து துன்பங்களும் உப்பு போன்று கரைந்து விடும் என்கிறார்கள்.