சரிகமப - வில் இலங்கை போட்டியாளர் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம் என்ன?
சரிகமப சீசன் 5 இல் இலங்கையில் மலையகத்தை சேர்ந்த போட்டியாளர் சினேகா போட்டியில் இருந்து நீக்கபட்டதன் உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார்.
சரிகமபா
சரிகமபா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட், பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் சுற்றாகும் சிறப்பான சுற்றாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அவரின் இசைப் பாடல்களை பாடி அசத்தினர்.
பலர் Golden Performance பெற்றதுடன், சிலர் அதைத் தவறவிட்டனர். இந்த ஏபிசோட்டில் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர். அந்த சுற்றில் மொத்தம் 26 போட்டியாளர்கள் போட்டியிட்டனர்.
நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கும், மதிப்பீட்டு முறைக்கும் ஏற்ப, 3 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த வாரத்தில் புள்ளிகள் அடிப்படையில் போட்டியாளர் சினேகா வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆனால், இதன் பின்னனியில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காரணம் இருப்பதை சினேகா நேரடியாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
"நான் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் கலந்துகொண்டேன். ஆனால், நிகழ்ச்சி தரும் ஆடைகளைத் தவிர்க்க முடியாத சூழலில் அதை அணிய நேர்ந்தது.
அதன்பின்னர், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றியும், என் பெற்றோரைப் பற்றியும் பரவிய செய்திகள் நம்மை ஆழமாக பாதித்தன. என் பெற்றோர் மனவேதனையடைந்தார்கள்.
இதனால் நான் கவலையடைந்து நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, போட்டியில் தொடர முடியாமல் போனேன். அதுவே என் வெளியேற்றத்திற்கான உண்மையான காரணம்," எனத் தெரிவித்துள்ளார்.
சினேகாவின் வெளியேற்றம் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது திறமைக்கு அங்கீகாரம் இருந்தாலும், சமூக வலைதள விமர்சனங்கள் அவரது பயணத்தை பாதித்திருக்கின்றன என்பது கவலைக்குரியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |