செய்வினை வைப்பது யாருக்கெல்லாம் பலிக்காது? செய்வினையை எப்படி கண்டுபிடிப்பது?
இன்றைய காலத்திலும் செய்வினை எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்.
நல்ல சக்தி இருக்கிறது என நம்பும்போது தீய சக்தி ஒன்று இருக்கிறது என நம்பியாக வேண்டும்.
நல்ல சக்திக்கு நாம் கடவுள் என்று உருவகப்படுத்துகிறோம், கெட்ட சக்திக்கு சாத்தான் என்று உருவப்படுத்துகிறோம். கடவுள், சாத்தான் என்பவை கற்பனையாகக் கூட இருக்கலாம்.
ஆனால் கண்களுக்கு தெரியாத இந்த இரண்டு நல்ல மற்றும் தீய சக்திகளும் இருக்கிறது என்பது கற்பனையாகாது. ஏனென்றால் ஏறக்குறைய எல்லாராலும் இந்த சக்திகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம்.
செய்வினை
செய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீதி தாக்குதல் நடத்துகின்றன.
செய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து வினோதங்கள் உணர்வீர்கள். காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என பார்க்கலாம்.
எப்படி செய்வினை வைப்பார்கள்?
ஒரு நபரின் முடி, துணி அல்லது உடலோடு ஒட்டியிருக்கும் பொருளைக் கொண்டு செய்வினை வைப்பார்கள். அந்த நபரின் புகைப்படத்தைக் கூட வைத்து செய்வினை செய்ய முடியுமாம்.
செய்வினை தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது.
மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும்.
அறிகுறிகள் என்னென்ன?
- உங்கள் அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது. யாரோ உங்களை தொடுவது போல் உணர்வது . ஆனால் பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.
- நீங்கள் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இங்கே பார்த்தோம். அப்போ இல்லை. இப்போ எப்படி வந்தது என குழம்புவீர்கள். இந்த நிகழ்வு அடிக்கடி நடக்கும்.
- நன்றாக போய்க் கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் திடீரன தொடர் தோல்விகள் ஏற்படும். காரணங்கள் தெரியாமலே அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படும். பணத்தை இழந்து கொண்டேயிருப்பீர்கள்.
- உடலில் நோய்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எந்த நோய் என மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காரணமின்றி உடலில் உபாதைகள் வந்த வண்ணம் இருக்கும். தொடர்ந்து வாந்தி அல்லது காய்ச்சல், அல்லது மூட்டு, தோள்பட்டைகளில் தாள முடியாத வலி என சொல்லிக் கொன்டே போகலாம்.
- கெட்ட கனவுகள் தினமும் வரும்,. நடு ராத்திரியில் பயந்து எழுந்து கொள்வீர்கள். பெரும்பாலும் ஏதோ தீயவை நடப்பது போலவே கனவுகள் தொடரும்.
- உணவில் சிறு சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போலிருக்கும். ஆனால் அது மற்றவர் கண்களுக்கு தெரியாது.
- மனப் பிரம்மை பிடிக்கும். சித்தம் கலங்கி போவார்கள். வெளியே போக விரும்ப மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே, தீய சக்திகள் அதிகம் நடமாடும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.
- சுற்றத்தை இழந்து நிற்பார்கள். மனைவியையோ, கணவனையோ இழப்பார்கள். கூட இருந்த நண்பர்களும் விலகுவார்கள். உறவினர்கள் எட்டியும் பார்க்கமாட்டார்கள். யாருமில்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு செய்வினை வைத்திருந்திருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.
- தற்கொலை எண்ணம் திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது.
- தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது. மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது. உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது.
- திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது. இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
செய்வினையை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
துளசி
ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது.
எலுமிச்சை
எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள்.
ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சை பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம்.
பரிகாரம் என்ன?
- மாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள்.
- ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. 3 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.
- குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு. ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு மற்றும் காளி வழிபாடு.
- மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம், திருப்பதி சென்று வர பாதிப்புகள் குறையும். சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி அம்மனை வழிபடலாம். மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.
யாருக்கெல்லாம் செய்வினை செய்ய முடியாது?
- நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடம் செய்வினை பலிக்காது. வீட்டில் துளசிச் செடியிருந்தால் அந்த செய்வினை வைத்தவரை நோக்கி திரும்பிவிடும். தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது.
- ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது.
- தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.
- ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும். கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள்.
- கிரஹன காலங்களில் பிறந்தவர்கள். உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள். யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது.
- சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை கெட்ட சக்திகள் நெருங்குவதில்லை.
- எக்காரியம் செய்தாலும் மனம் ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியத்தில் இருந்து தப்பிக்க வழியாகும்.