கெட்ட சக்தியை ஓட ஓட விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! இப்படி செய்து பாருங்கள்
எலுமிச்சை கனியை நல்ல சக்தியை பெறவும், தீய சக்தியை விரட்டியடிக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு பழம்.
இந்த எலுமிச்சம் பழத்தை கோவிலில் கொடுக்கும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வலுபெற்று இருக்கும்.
வீட்டில், தொழிற் கூடங்களில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்டவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
தீய சக்திகளை எப்படி விரட்டுவது?
எலுமிச்சை ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவுபாடு ஏற்படும் உறவுகளின் இடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது எனவே எதிர்மறை ஆற்றலை கண்டறிந்து அதை வெளியேற்ற வேண்டும்.
மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும்.
அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள், கருப்பு நிறத்தில் மாறினால், அதை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.
மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.