ஆடி மாத பலன்கள்: இந்த ராசிக்காரர்கள் ஜெயிக்க போறாங்க.. உங்க ராசிக்கான பலன் என்ன?
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவார்.
இப்படி சூரியன் தன்னுடைய ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் ஜூலை 17 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் தமிழ் மாதங்களில் 4 ஆவது மாதமான ஆடி மாதம் பிறக்கிறது.
ஜோதிடத்தின்படி, ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் நிலைகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளன் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.
அந்த வகையில், பிறந்திருக்கும் 2025 ஆடி மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாத பலன்கள்
- மேஷம்- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வீட்டுச் சூழல் சற்று மோசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. சொத்து விஷயங்களில் தகராறு ஏற்படலாம். இதனால் உங்களின் சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் வாழ்க்கை சிறக்க பொறுமை மற்றும் நிதானத்துடன் இருப்பது அவசியம்.
- ரிஷபம்- ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் சகோதரர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். இவ்வளவு நாட்களாக செய்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளது. புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- மிதுனம்- மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பேச்சில் நிதானம் தேவை. மற்றவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பணம் விடயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். முதலீடுகள் செய்யும் பொழுது கவனமாக இருக்கவும். குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். சண்டைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- கடகம்- கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். கோபம் வர வாய்ப்பு உள்ளதால் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் வயிறு தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களை கட்டுபடுத்திக் கொள்ள முயற்சிக்கவும்.
- சிம்மம்- சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்களை செல்லவும் வாய்ப்பு உள்ளது. சற்று பலவீனமாக உணருவீர்கள். கண்கள் மற்றும் கால்கள் தொடர்பான பிரச்சினைகள் வரும். உயர் அதிகாரியால் ஏற்படும் பிரச்சினை வாழ்க்கையை மாற்றும்.
- கன்னி- கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று போராடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- துலாம்- துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பலன்கள் அதிகமாக கிடைக்கும். கௌரவமும், அந்தஸ்தும் நினைப்பதை விட அதிகமாகும். பிள்ளைகளுக்கு தந்தையுடன் நல்ல உறவு ஏற்படும். உங்கள் வேலையில் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- விருச்சிகம்- விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை விட செயல்களில் அதிக கவனம் தேவை. நிறைய பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. சகோதர்களுடன் நல்ல உறவு இருக்க வேண்டும். ஆடி மாதம் அமைதியாக வேலை செய்து வந்தால் உங்களின் கஷ்டங்கள் குறையும்.
- தனுசு- தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் மற்றும் ரகசியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற விடயங்களில் கவனம் திதறும் வாய்ப்பு உள்ளது. செரிமான பிரச்சினைகள் ஏற்படும். இந்த மாதம் முடிந்த அளவு பாதுகாப்பாக இருக்கவும்.
- மகரம்- மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான புரிந்துணர்வு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பெரிய பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- கும்பம்- கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக அமையும். கடின உழைப்பிற்கான பலனும், பாராட்டும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்ட விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும்.
- மீனம்- மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மனக்குழப்பத்துடன் இருப்பார்கள். எதையும் யோசிக்காமல் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் வரும் பொழுது பொறுமையுடன் இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரும். உணவில் கவனமாக இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).