பாம்புகளுக்கு முடிவுக்கட்ட அறிமுகமாகும் புதிய செயலி.. பயன்படுத்துவது எப்படி?
உலக பாம்பு தினத்தை முன்னிட்டு, பாம்புகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அநேகமான மக்கள் பாம்புகடியால் உயிரிழக்கிறார்கள். இனி வரும் காலங்களில் உயிர் சேதங்களை குறைப்பதற்காக பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
மேலும், பாம்புகளை பிடிப்பதற்காகவே புதிய செயலியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாம்பு பிடிப்பவர்களுக்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளனர்.
அந்த வகையில், பாம்பு பிடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் செயலி தொடர்பாக தெளிவாக பதிவில் பார்க்கலாம்.
புதிய செயலி அறிமுகம்
பாம்புகளை அறிவியல் முறைப்படியும், ஆக்கப்பூர்வமான வழியிலும் மட்டுமே கையாள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அறிவியலற்ற முறையில் பாம்புகளைப் பிடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இதனால் பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பதற்காக “நாகம்” என்ற பெயரில் புதிய செயலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்க முடியும். நாகம் செயலி பொதுமக்கள் பாம்புகளைப் பார்த்தவுடன் புகார் அளிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சரியான நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்து, பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்.
பயன்படுத்துவது எப்படி?
அறிவியல் முறைப்படி பாம்புகளைப் பிடித்து, அவற்றின் வாழ்விடத்தில் விடுவார்கள்.
இந்தச் செயலியில், பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்களின் பெயர், மொபைல் எண், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள், ஆண்டுவாரியாகப் பாதிக்கப்பட்டோர் விவரம் உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தச் செயலி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |