வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க
தீபாவளிக்கு முன்பு வீட்டில் எந்தெந்த உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தினால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி என்றால் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டமாக நிறைந்திருக்கும். தீபாவளி செல்வத்தின் அடையாளமான மகாலட்சுமியை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படும் நிலையில், வீட்டை அழகுபடுத்த தீப ஒளிகளை பயன்படுத்துகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டை சுத்தம் செய்வதும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. வீட்டினை சுத்தம் செய்வதால் நேர்மறை ஆற்றல், செல்வ வளம் பெருகுவதாக சாஸ்திரம் கூறுகின்றது.
ஆனால் உடைந்த மற்றும் தேவையற்ற பொருட்கள் போன்றவற்றினை வைப்பது கூடாது. ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்குமாம்.
அவ்வாறு எதிர்மறை ஆற்றல் அதிகமாகினால் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடியேறமாட்டாள் என்று நம்பப்படுகின்றது. மேலும் வீட்டில் பணக்கஷ்டமும் அதிகரிக்குமாம். அந்த வகையில் லட்சுமி தேவியின் ஆசீயை பெறுவதற்குவீட்டில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

அகற்ற வேண்டிய பொருட்கள் என்னென்ன?
பழைய மற்றும் கிழிந்த காலணிகளையும் வீட்டில் வைப்பது கூடாது. இவை குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சியை பாதிப்பதுடன், எதிர்மறை ஆற்றலையும் அதிகரிக்குமாம்.
உடைந்த சிலைகள் மற்றும் படங்கள் வீட்டின் பூஜை அறையில் இருந்தால் அவற்றினை அகற்ற வேண்டும். ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை அதிகரித்துவிடுமாம். ஆகையால் உடைந்த சிலையினை ஓடும் ஆற்றில் விடவும் மற்றும் அரச மரத்தடியில் வைத்துவிடவும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உடைந்தது காணப்பட்டால் அதனை அகற்றிவிட வேண்டும். வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்துவதுடன், வீட்டில் பண பிரச்சனைகள் அதிகரிக்கும்.
உடைந்த மற்றும் பழுதடைந்த கடிகாரங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்துவதுடன், வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கும் இடையூறை ஏற்படுத்துமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |