மரணத்தை நெருங்கிய கடைசி நிமிடங்கள் - விமானம் விழுந்து வெடித்ததில் 9 பேர் பலி!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கிரீனேக்கர்ஸ் பகுதியில் தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் தரையில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானி பேசிய அதிர்ச்சியூட்டும் வார்த்தைகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EXTREME CLOSEUP shows PLANE DIVING INTO THE GROUND LIKE A MISSILE before MASSIVE EXPLOSION in FLORIDA https://t.co/b2I6qVjMt2
— RT (@RT_com) November 1, 2026
மோசமான வானிலையால் விபத்து
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் விமான நிலையத்திலிருந்து பஹாமாஸின் நார்த் எலியூதெரா தீவை நோக்கிப் பயணித்த லியர்ஜெட் 60 ரக விமானம், மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகத் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் வேகமாக உயரத்தை இழந்ததைத் தொடர்ந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர உதவி கோரியுள்ளனர். அப்போது, விமானம் மிக வேகமாகத் தரையை நோக்கி இறங்குவதாகவும், தரையில் மோதப்போவதாகவும் விமானி எச்சரித்துள்ளார்.
இதுவே விமானத்திலிருந்து பதிவான கடைசி தகவல்களில் ஒன்றாகும். விமானம் விழுந்ததில் பெரும் தீப்பிழம்புகளும் கரும்புகையும் ஏற்பட்டதுடன், விபத்துக் காட்சி வாகனத்தின் கண்காணிப்புக் கமராவிலும் பதிவாகியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CHILLING AUDIO captures FEMALE PILOT’S FINAL MOMENTS before PLANE CRASHES in FLORIDA ‘MAYDAY, MAYDAY, we’re descending 10,000 FEET PER MINUTE’ ‘LOOK OUTSIDE JACK… HOLY FU*K WE’RE OUT OF TIME’ — TERRIFYING final words heard before impact https://t.co/AaHiQRI69N
— RT (@RT_com) November 1, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |