கன்னி ராசிக்கு செல்லும் சுக்கிரன்: நவம்பர் 6 முதல் இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட ரீதியில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிர பகவான். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரித்து வருகிறார். அக்டோபர் 03 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பயணித்து வரும் சுக்கிரன், நவம்பர் 06 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.

புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசியில் சுமார் 17 நாட்கள் தங்கவுள்ளார். சுக்கிரனின் இந்த வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு சாதக பாதக மாற்றங்கள் ஏற்படுத்தும்.
குறிப்பாக, 4 ராசிக்காரர்கள் வாழ்வில் சாதகமான பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 2ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிதி ஆதாயங்கள் அதிகரித்து, பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும்.
பணப் பிரச்சனைகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.உறவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நீங்கும்.
கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். ஆளுமையிலும் பேச்சுத்திறனிலும் முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் பழைய நட்புகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருப்பதுடன், படிப்படியாக மேலும் வலுப்பெறும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்; பழைய பிரச்சனைகளும் தீரும். வரவு, செலவு மற்றும் சேமிப்பைச் சமநிலையுடன் கையாள்வீர்கள். பணவரவு அதிகரிப்பதுடன், மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும்.
தனுசு

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்!
தனுசு ராசியின் 10ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், புதிய நட்புகள் உருவாகும். அவற்றின் மூலம் நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், சேமிப்பும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |