திடீரென விலகிய அன்னம் சீரியல் திவ்யா கணேஷ்- அப்போ இனி யாரு?
அன்னம் சீரியலில் இரண்டாம் நாயகியாக நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் சீரியலில் இருந்து திடீரென விலகியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அன்னம் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் அன்னம்.
இந்த சீரியலில் வழக்கமான கதையை போன்று அல்லாமல் தன்னுடைய காதலனை விட்டுக் கொடுக்க முடியாமல், அதற்காக போராடும் பெண்ணின் கதையையும், தந்தை பாசம் கிடைக்காமல் தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்த பெண்ணின் கதையையும் இணைக்கும் வகையில் கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
தற்போது அன்னத்தின் கணவரான கார்த்திக்கிற்கு மீது ஏதோ தவறு உள்ளது எனக்கூறி பொலிஸால் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் மீது தவறு இல்லை என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்.

அன்னம் கார்த்திக் மீதுள்ள காதலை வெளிகாட்டும் வகையில், சில காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் பொருத்துக் கொள்ள முடியாத ரம்யா எப்படி இவர்களை பிரிக்கலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
திடீர் விலகல் ஏன்?
இந்த நிலையில், அன்னம் சீரியலில் இரண்டாம் நாயகியாக நடித்து வந்த திவ்யா கணேஷ் சீரியலில் இருந்து திடீரென விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மனைவியாக மிகச் சிறப்பாக தன்னுடைய நடிப்பை காட்டிய திவ்யாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என சரியாக குறிப்பிடப்படவில்லை.

சில சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியேறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது தொடரில் இருந்து திவ்யா விலகிய பின்னர், அதற்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |