சிறையில் அடைக்கப்பட்ட பிரபல இயக்குனர்: தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்! பரபரப்பில் திரையுலகம்
பல திரைப்படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக இருந்த ‘எண்ணி ஏழே நாள்’ என்ற திரைப்படத்தை 2014ஆம் ஆண்டு தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் 1.03 கோடி ரூபா கடனாக பெற்றிருந்தார். ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பிக்கடாத நிலையில் இருந்ததால் குறித்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்தக்கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் லிங்குசாமி மீது பிவிபி கேபிடல் வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனைய உறுதி செய்துள்ளது.
இதனால் மொத்த திரையுலகமும் ஒரே பரபரப்பில் இருக்கிறது.
இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பெரும் வசூலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.