6 மாத சிறை! இயக்குனர் லிங்குசாமி எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான லிங்குசாமி பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த நாளில், லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, எண்ணி ஏழு நாள் படத்தை தயாரிப்பதற்காக 1 கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாக பெற்றுள்ளார்.
அவர் கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான செக்கில் பணம் இல்லாததால், பிவிபி நிறுவனம் தரப்பில் காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு நீதி மன்ற விசாரணைக்கு வருகையில், 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேல் முறையீடு
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பேசிய அவர் ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.
இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.
அவர்கள் கொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.