பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகம்
கமல், விஜய் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய சலீம் கவுஸ்(70) காலமானது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகர் சலீம்
சென்னையில் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பிறந்தார் சலீம் அகமது கவுஸ். கிறிஸ்ட் சர்ச் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த சலீம் கவுஸ், பிரஸிடன்ஸி காலேஜில் பட்டப்படிப்பு படித்தார். மேலும் புனேவில் தொலைக்காட்சி மற்றும் சினிமா சார்ந்த படிப்பையும் படித்துள்ளார்.
மர்மமான முறையில் இறந்த சிம்ரனின் தங்கை மோனல்! பல ஆண்டுக்கு பின் வெளி வரும் உண்மைகள்
சினிமாவுக்காக தனது பெயரை சலீம் கவுஸ் என மாற்றிக்கொண்ட இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல படங்களில் வில்லனாக களமிறங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளார்.
சின்னக்கவுண்டர் படத்தில் சக்கரை கவுண்டராக கிராமத்து வில்லனாக அலறவிட்ட இவர், தொடர்ந்து மகுடம், செந்தமிழ் பாட்டு, தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா மற்றும் விஜய்யின் வேட்டைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற வில்லன் கேரக்டரில், பயம்... வேதநாயகம்னா பயம் என்று சலீம் கவுஸ் பேசும் வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். கடைசியாக ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தில் நடித்துள்ளார் சலீம். அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் மக்காச்சோளம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?
திடீர் மரணம்
இந்நிலையில் நேற்று இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி சலீம் கவுஸ் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.