படப்பிடிப்பில் இளம் இயக்குனர் திடீர் மரணம்! நடிகர் சாந்தணு வேதனை பதிவு
நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில், இளம் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணா என்பவர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்துவிட்டதாக வேதனை பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சாந்தனுவின் டுவிட்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம்வர வேண்டும் என்ற கனவுடன், தற்போது உதவி இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணா என்ற 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சாந்தனு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது என்னவெனில், தனது உயிர் நண்பர் ராமகிருஷ்ணாவிற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ள அவர், எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகும்.
எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாத இளைஞர், திடீரென படப்பிடிப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியதோடு, உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு போன் செய்துள்ளதாகவும், தன்னால் போனை எடுக்கமுடியாமல் ஆகிவிட்டது. அதிகமான மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகில் தற்போது The Biggest Culprit என்றால் மன அழுத்தம் தான்... ராமகிருஷ்ணா உயிரிழப்பிற்கும் காரணம் மன அழுத்தமே என்றும் ஈகோ மற்றும் நெகட்டிவிட்டியை தூக்கி எறியுங்கள் நண்பர்களே என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.