தாய்க்கு முதல்மாத சம்பளத்தை அனுப்பிய பெண்! பின்பு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
தனது முதல் மாத சம்பளத்தை தாய்க்கு அனுப்புவதாக நினைத்து வேறு நபருக்கு அனுப்பிய இளம்பெண்ணின் சோகக்கதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மாத சம்பளம்
பொதுவாக ஒரு நபருக்கு வேலை கிடைத்த பிறகு கிடைக்கும் முதல் மாத சம்பளம் என்பது மிக மிக ஸ்பெஷல் ஆகும். இந்த சம்பளத்தை பெரும்பாலான நபர் தனது தாயிடமே கொடுக்க நினைப்பார்கள்.
மலேசியாவைச் சேர்ந்த Fahada Bistari என்ற பெண் அவ்வாறு நினைத்து இறுதியில் அரங்கேறிய தவறு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் தனது முதல் மாத சம்பளத்தை தாய்க்கு அனுப்புவதாக நினைத்து வேறொரு நபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கதறிய சோகம்
இதன் பின்னர், சம்மந்தப்பட்ட நபரின் எண்ணும் Fahada-வுக்கு கிடைத்துள்ள நிலையில், அதற்கு அழைத்து பணம் தவறுதலாக பணத்தை அனுப்பி வைத்ததாக கூறி திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த நபரோ ஒரு நன்கொடையாக நினைத்துக் கொண்டு விட்டு விட கூறியதால், குறித்த பெண் கண்ணீருடன் காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
தனக்கு கிடைத்த சம்பளம் சற்று குறைவாக இருந்ததாகவும் இதனால் அதனை தாய்க்கு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணீருடன் கூறி உள்ளார். குறித்த சம்பவத்தால் நான் சிறந்த பாடம் கற்றுக்கொண்டதாக கூறிய நிலையில், குறித்த பெண்ணின் பேச்சைக் கேட்ட நபர் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடடதாகவும், கூறப்படுகின்றது.