இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் இடம் பெற்ற மரணம்- கண்ணீரில் குடும்பத்தினர்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார்
இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குநராக மாறியவர் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
இதனை தொடர்ந்து இவர், கடந்த 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், ரகுமான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, என ஆகிய நடிகர்கள் நடித்திருந்தார்கள். முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தினால் அடுத்தடுத்து சேரன் பாண்டியன், புது புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, என ஏராளமான படங்களை இயக்கினார்.
அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி தெனாலி, கூகுள் குட்டப்பா, ஹிட்லெஸ்ட் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.
மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில், தற்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.
இவ்வளவு பெயர் புகழ் வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் தயார் ருக்மணி அம்மாள் (88 வயது) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சில உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த சமயத்தில், காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை 2:30 மணிக்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வீடு அமைந்துள்ள டெம்பிள் அவென்யூ ரோடு, ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கே எஸ் ரவிக்குமாருக்கு ஆறுதல் கூறி அவருடைய தாயாருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
