பிக் பாஸ் சௌந்தர்யா சொன்ன குட் நியூஸ் - குவியும் லைக்குகள்
பிக் பாஸ் சௌந்தர்யா தற்போது பிக் பாஸ் யோய் வந்ததன் பின்னர் தனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உயர்வுகள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
பிக் பாஸ் சௌந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சௌந்தர்யா தற்போது மக்களகுக்கு இன்னுமொரு குட் நியூஸ் சொல்லி உள்ளார்.
இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட நிலையில், அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் சௌந்தர்யாவிற்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 8-வது சீசனில் கலந்து கொண்டு, ரன்னர்-அப் ஆக இரண்டாம் இடத்தை பிடித்தவர் சௌந்தர்யா.

அவரது கியூட் ரியாக்ஷன்கள், விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்ட விதம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
தன்னுடைய குரல் காரணமாக பல இடங்களில் அவமானப்பட்ட சௌந்தர்யா அந்த குரலாலேயே பிக் பாஸ் வீட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து இறுதிவரை வந்தார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சௌந்தர்யாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதுடன், மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், பிக் பாஸ் சீசன் 7-ல் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது சௌந்தர்யா அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் கேட்டு தன் காதலை கூறி இருந்தார்.
அதன்பிறகு இருவரும் இணைந்து அளித்த பேட்டிகளில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
திருமண அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இருவரும் சேர்ந்து சென்னை பெசன்ட் நகரில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றை தொடங்கி இருந்தனர்.
சௌந்தர்யாவின் குடும்பம் ஏற்கனவே பேக்கரி பிசினஸில் இருப்பதால், வணிகத் துறையில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
[
குட் நியூஸ்
இந்நிலையில், தற்போது சௌந்தர்யா தனது வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான சாதனையாக சொந்த வீடு வாங்கியுள்ள தகவலை தனது சமூக வலைா்ாள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் புதிய வீட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ரசிகர்கள், "கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்" என பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் "பிக் பாஸ் மூலம் கிடைத்த பணம் இப்போது வேலை செய்கிறது" என கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
எப்படியானாலும், பிக் பாஸ் பயணத்திற்கு பிறகு சௌந்தர்யாவின் வாழ்க்கை புதிய உயரங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |