Chicken Roast: சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைலில் இப்படி செய்து பாருங்க! அட்டகாசமாக இருக்கும்
சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடித்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் நாம் சமைத்து சாப்பிடுகின்றோம்.
குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சிக்கனை பிரியாணி, கிரேவி, சுக்கா, சிக்கன் 65 என சமைத்து கொடுத்துள்ள நாம் கேரளா ஸ்டைலில் சமைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஆம் கேரளா ஸ்டைலில் சிக்கன் ரோஸ்ட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
மிளகாய் பொடி - 1ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 3 ஸ்பூன்
வெங்காயம் - 15 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு
மல்லி - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
காஸ்மீர் மிளகாய் - 5
மிளகாய் வத்தல் -2
செய்முறை
முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கடாயில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து, உப்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
தொடர்ந்து கலந்து வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி மூடி வைக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்த பின்பு மல்லி இலை தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |