சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் பச்சை அரிசி: என்னென்ன நன்மைகள் தெரியுமா?
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில், சக்கரைக் நோயாளிகளுக்கு எதிரியே இந்த இந்த இனிப்பு வகைகள் தான். இந்த இனிப்பைக் கட்டுப்படுத்தி உங்களை ஆரோக்கியமாக்கும் உணவுதான் இந்த பச்சை அரிசி.
சக்கரை நோயாளிகளுக்கு சிவப்பு
அரிசி சிவப்பு அரிசியானது புரதச்சத்து அதிகம் நிறைந்து இருக்கிறது.
இந்த சிவப்பு அரிசியில் அதிகளவு மாங்கனீசியம், கார்போஹைட், செலினியம், துத்தநாகம், கலோரிகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, கொழுப்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது நமக்கு மலச்சிக்கல் இல்லாமல் வைக்கிறது
- சிவப்பு அரிசியில் சக்கரை நோயை கட்டுப்படுத்தும் பண்பு உள்ளதால் இது நீரிழிவை அதிகரிக்க செய்யாது.
- இந்த அரிசியை சாப்பிட்ட உடன் உடலில் இரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல் பொறுமையாக கலக்கும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது
- சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது.
- சிவப்பு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் மாவுச்சத்தில் சென்று சேர்க்கப்படுவதால் இதை தீட்டிய பிறகும் நாம் சத்தை பெற்றுவிட முடியும்.
- பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடும்.