சர்க்கரை நோய்க்கு தயிர் சாப்பிடலாமா?
பொதுவாக சக்கரை வியாதி வந்து விட்டால் இதை சாப்பிடக் கூடாது அதை சாப்பிடக் கூடாது என்று ஒரு லிஸ்ட் இருக்கும்.
அதன்படி சாப்பிட்டால் தான் சக்கரை கட்டுக்குள் இருக்கும் என்பார்கள். அதாவது ஒருவரின் சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதி தான்.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த வியாதி தற்போது நம்மிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
இதன் விளைவு இறுதியில் எமது உடல் உறுப்புக்களை இழக்கத்தான் நேரிடும். இதற்கு என பல மாத்திரை மருந்துகள் இருந்தாலும் உங்கள் உணவில் அல்லது உணவிற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவே சில பழங்களையும், உணவுகளையும் சேர்த்துக் கொள்வது சக்கரை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும்.
சக்கரை நோய்க்கு தயிர் சாப்பிடலாமா?
சக்கரை நோயாளிகளுக்கு தயிர் மிகவும் பயன் நிறைந்தது. தயிரானது உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கவல்லது.
தயிர் சாப்பிடுவதானால் வெயில் காலங்களில் உணவு செரிமானத்தை சீராக்கும், மேலும் உடல் சூட்டைத் தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
இந்த தயிர் சக்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனை சாப்பிடுபவர்கள் டைப்-2 சக்கரை நோயின் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கலாம்.
80-123 கிராம் தயிர் சாப்பிடும் போது சுகர் அளவு உறுதியாகக் குறைகிறது. தயிரின் புரோபயாடிக் விளைவு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வயதானவர்களுக்கு நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
நூறு கிராம் தயிரில் 10 கிராம் புரதம் உள்ளது, இது இரத்த சர்க்கரையின் ஆரோக்கியமற்ற உயர்வை குறைக்க அல்லது கட்டுப்படுத்த ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
10-15 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது 9 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ள சரியான வகை தயிரை தேர்வு செய்ய வேண்டும்.