தயிருடன் இந்த உணவை சாப்பிட்டால் உங்கள் வயிறுக்கு ஆபத்து: இனி இதை தவிர்த்து விடுங்கள்!
Hair Growth
By Rinosharai
நம் அன்றாட உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமும் பாரம்பரியமும் ஆகும்.
தயிரானது உடலுக்கு பல வழிகளில் நன்மையைக் கொடுத்தாலும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது உங்கள் வயிற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- வெயில் காலங்களில் உணவு செரிமானத்தை சீராக்கும்
- உடல் சூட்டைத் தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்
- தினமும் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் இதய நோய் பாதிப்பு வராது.
- தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
- தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது.
- தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.
- தயிரை நேரடியாக தலையில் சேர்த்தால் பொடுகு, தொற்று, தலை வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு தீரும்.
தயிருடன் சேர்க்க வேண்டாம்.....
- பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதற்கு காரணம் மாம்பழத்தில் சூடு அதிகம் மற்றும் தயிர் குளிர்ச்சியானது எனவே இந்த கலவை உடலுக்கு நல்லது அல்ல.
- தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிடக்கூடாது ஏனெனில் தயிர் குளிர்ச்சியானது, வெங்காயமும் குளிர்ச்சியானது இவை இரண்டும் உடலுக்கும் சென்றதும் சூட்டை கிளப்பிவிடும்.
- பிரியாணி போன்ற உணவிற்கு சைட் டிஷ்ஷாக தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதும் கூடாது.
- தயிருடன், மீன் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளுடன் சேர்த்து கொள்ள கூடாது.
- எண்ணெய் உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது செரிமானப்பிரச்சினையைப் பாதித்து விடும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட உணவுகள் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்பிரச்சினை, தோல் ஒவ்வாமை போன்ற பல வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US