சர்க்கரை வியாதி இருக்கா? பார்வையை இழக்க நேரிடும்! உடனே இந்த பானத்தை குடிங்க
கண் சம்மந்தமான பிரச்சனைகள் நீரிழிவு நோயாளிகளை தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது கண் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்குமாம்.
சிலருக்கு மீண்டும் சரிசெய்ய முடியாத வகையில் கூட பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
கண்களுக்கு ஆபத்து
நீரிழிவு நோயாளிகள் கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சக்கரை வியாதி இருப்பவர்கள் கண்களைப் பாதுகாக்க வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லுடீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவை உண்ணவேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் , மிதமான உடற்பயிற்சியையும் கடைப்பிடித்தாலே சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தி விடமுடியும்.
கண்ணை பாதுகாக்கும் அற்புத பானம்
தேவையான பொருள்கள்
- கேரட்
- இஞ்சி
- கொத்தமல்லி
- தேங்காய்ப்பால் அல்லது இளநீர்
தயாரிப்பு
முதலில் கேரட், இஞ்சி,கொத்தமல்லி மூன்றையும் ஒன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் தேங்காய்ப்பால் அல்லது இளநீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
அவ்வளவுதான் 2 நிமிடத்தில் எளிதாக ஜூஸ் தயாராகிவிடும்.
இதனை தொடர்ந்து அருந்தி கண் பிரச்சினை குறைவதை நன்கு உணர முடியும்.
அதிசயம் செய்யும் கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருப்பதால் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது.
இவை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது.
இதில் இருக்கும் ஆன் டி ஆக்சிடன்டானது சருமத்தில் இருக்கும் செல்களை புதுப்பிக்கிறது.
இதனால் சருமம் பொலிவாக வைக்க உதவுகிறது.
கேரட்டில் இருக்கும் பால்காரினால் மற்றும் பால்காரிண்டீயோல் என்னும் வேதிப்பொருள்கள் உடலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
இதில் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.மேலும் ஆல்பா கரோட்டின், லுட்டின் போன்றவற்றால் உடலில் இருக்கும் ஊளைச்சதை குறையவும், கொழுப்பு குறைக்கவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்புசக்தி அளிக்கிறது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட் சாப்பிடுவதன் மூலம் பெறும் நன்மைகளை நீரிழிவு இருப்பவர்களும் பெறமுடியும்.
இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரித்துகொள்ள முடியும்.
இதேவேளை, கேரட் நார்ச்சத்து நிறைந்தது. இதனால் மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி, கேரட் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. அதோடு இதய நோய்களையும் தடுக்கிறது. உங்கள் தினசரி கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்க உதவும்.