தனுஷின் முதல் காதலி யார் தெரியுமா? அதுவும் 16 வயதில்
நடிகர் தனுஷின் முதல் காதலைப் பற்றி பேட்டியொன்றில் கூறிய சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவினால் உலக அளவில் பிரபலமாகி அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படத்துடன் சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாார்.
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் இருவரும் தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முதல் காதல்
இந்நிலையில், நடிகர் தனுஷ் 2013ஆம் ஆண்டு ஹிந்தியில் நடித்த முதல் திரைப்படம் தானட ராஞ்சனாவின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வில் கலந்துக் கொண்ட வேளையில் தன் முதல் காதல் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் தான் 16 வயதில் பள்ளியில் படிக்கும் போது பெண்ணை காதலித்ததாகவும் அவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உணர்ந்ததாகவும் தானும் மற்ற பையன்களை போலவும் கவர நான் நிறைய செய்தேன் அவள் என்னை என்னை ஏற்றுக் கொண்டாள் ஆனால் ஒரு வருடம் கழித்து என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அப்போதும் எனக்கு அவள் மேல் காதல் இருந்தது.
சில காலம் கழித்து இந்த காதல் க்ரஷ் ஆக இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது காதல் என்பதை உணர்ந்தேன் என அதில் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |