தனுஷை விடாமல் காதலித்த பிரபல பாடகி: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பயில்வான்
அவ்வப்போது பல பிரபலங்களை வைத்து சர்ச்சைகளை கிளப்புவது பயில்வானின் வேலையாகி விட்டது அப்படி இப்போது தனுஷை வெறித்தனமாக காதலித்த பாடகி பற்றி பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவில் அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படத்துடன் சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாார்.
மேலும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தனுஷை காதலித்த பாடகி
பல சர்ச்சைகளை கிளறி பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன், இவர் தற்போது தனுஷ் குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
தமிழில் பல வித்தியாசமான பாடல்களைப் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுசித்ரா. இவர் நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.
கார்த்திக் தனுஷிற்கு நெருங்கிய நண்பருமாவார். கார்த்திக் - சுசித்ரா இருவரின் வாழ்க்கையும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த வேளையில் தனது மனைவிக்கு மன நலம் சரியில்லை எனவும் எப்போதும் மது போதையிலேயே இருப்பதாகவும் சொல்லி விவாகரத்து செய்து விட்டார்கள்.
ஆனால், இவர்களின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என பயில்வான் தெரிவித்திருக்கிறார். தனுஷ்-சுசித்ரா இருவரும் காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சுசித்ராவுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டதால் தான் தனுஷ் குறித்து பல தகவல்களை தெரிவித்ததாக சொல்லியிருக்கிறார். மேலும், தனுஷ் பிரிந்து சென்றதால் தான் குடிக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |