புதிய கெட்டப்பில் சியான்.. கோலிவுட் நாயகர்களை மிரள வைக்கும் காட்சி!
சியான் விக்ரமனின் புதிய கெட்டப் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சியான் விக்ரம். ஜான் கென்னடி வினோத் ராஜ் என்ற பெயரை சினிமாவிற்காக மாற்றி கொண்டு தற்போது நட்சத்திர நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து சினிமா மீது நடிப்பு மீதும் கொண்டுள்ள ஆசையில் லயோலா காலேஜில் படிப்பு முடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இறுதியாக இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது “ஆதித்த கரிகாலனாக வந்து ரசிகர்களுக்கு மாஸ் காட்டியிருப்பார்.
புதிய கெட்டப்
இந்த நிலையில் சியான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஷீட்டிங்கின் போது கெட்டப் போட்டு கொண்டிருக்கிறார். இதன் போது எடுக்கபட்ட வீடியோக்காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும் போது சியானின் அடுத்த படம் கோலிவுட் சினிமாவையே திருப்பி போடும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.