தனுஷின் பிறந்த நாள் இன்று: கோடி கோடியாய் கொட்டிக் கிடக்கும் சொத்து... எவ்வளவு தெரியுமா?
இன்றைய தினம் பிறந்த தினம் கொண்டாடி வரும் தனுஷின் சொத்து மதிப்பு விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவினால் உலக அளவில் பிரபலமாகி அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படத்துடன் சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாார்.
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் இருவரும் தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
சினிமாவில் உச்சம் தொட்ட தனுஷ் சேர்த்து வைத்திருக்கும் சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது வேறு மொழிப் படங்களிலும் நடிப்பதால் அதிக சம்பளம் பெறுவதாகவும் ஒரு படத்திற்கு மட்டும் 30 இலிருந்து 35 கோடி வரைக்கும் சம்பளம் பெறுகிறார்.
அண்மையில் வெளியான தகவலின் படி தனுஷிடம் கடந்தாண்டு 160 கோடி சொத்து இருந்ததாகவும் தற்போது அது 200 கோடியைத் தாண்டி சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், தனுஷிடம் 18கோடிக்கு சொகுசு வீடு ஒன்று உள்ளதாகவும் போயஸ் கார்டனிலும் தனது கனவு இல்லத்தில் அத்தனை சொகுசுகளையும் கொண்ட வீட்டை 150 கோடிக்கு கட்டியிருக்கிறார்.
கார்களின் மீது அதீத ப்ரியம் கொண்ட தனுஷிடம் 45 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் XE காரும், 98 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் மஸ்டாங்க், 3.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லி, ரூ.6.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், 1.65 கோடி மதிப்புள்ள ஆடி A8, 1.42 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S-Class என பல ஆடம்பர கார்களுக்கும் சொந்தக்காரராவார்.
இது மட்டுமல்லாமல் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்து அதிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |