தனுஷ் மீது விருப்பம் கொள்ளும் சர்ச்சை நாயகி
நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக சர்ச்சை நடிகையொருவர் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவில் அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படத்துடன் சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாார்.
மேலும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தனுஷை திருமணம் செய்ய துடிக்கும் நடிகை
இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையில் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக போன்ற சீரியல்களிலும் நடித்தவர்.
இந்நிலையில், இவர் பேட்டியொன்றில் பேசிய விடயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் தான். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன்.
அந்த அளவுக்கு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்குமு் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
இதே போன்று பலரும் அவரிடம் சொல்லியிருக்க வாய்ப்புள்ளதால், அதனை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர மற்றவர்களுக்கு தெரியாது.
அந்த காதலை மனதிற்குள்ளே வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.