எதிர்நீச்சல் ஆதிரைக்கு ப்ரபோஸ் செய்த நடிகர் தனுஷ்: தீயாய் பரவும் வீடியோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்துவரும் சத்யாவிடம் நடிகர் தனுஷ் ப்ரபோஸ் செய்த காணொளி ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
ஆதிரைக்கு ப்ரபோஸ் செய்த தனுஷ்
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்து வரும் சத்யா தேவராஜனின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் ஆதிரைக்கு ப்ரபோஸ் செய்திருப்பார். 2015ஆம் ஆண்டு அநேகன் படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கேள்வி கேட்டு உரையாடுவது போல நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த ஆதிரை சினிமாவைப் போல நிஜத்தில் இற்கிருக்கும் யாருக்காவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல அதற்கு நடிகர் தனுஷ் நவரச நாயகன் போல பேசி ப்ரபோஸ் செய்த காட்சி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |