மோசமான நிலையில் இருக்கிறாரா ஸ்ருதிஹாசன்? அவரே வெளியிட்ட உண்மை
நான் நலமாக இருக்கிறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு?
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.
ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் தான் PCOS என்ற ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நன்றாக இருக்கிறேன்
இதன் மூலம் ஸ்ருதிஹாசன் உடல் நிலை குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில்
"மோசமான நிலைமையில் இருப்பதாக பல வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி இல்லை. நான் நலமாக தான் இருக்கிறேன்.
எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாடகி பிரியங்காவா இது? மார்டன் உடையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா?