இப்படியான அறிகுறிகள் இருந்தால் இனி புறக்கணிக்காதீர்கள்... இந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்
இப்போதெல்லாம் நோய்களுக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு புது புது நோய்களும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில், நமக்கு பரிட்சயமான ஒரு வைரஸ் தான் டெங்கு தான். இது கொசுக்களால் பரவுகிறது. அதிலும் ஏடிஸ் ஈஜிப்டி என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் கடிப்பதால் தான் ஏற்படுகிறது.
டெங்கு வைரஸ்
கடந்த சில மாதங்களாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்த டெங்கு வைரஸால் தான். சிறியவரிலிருந்து பெரியவர் வரைக்கும் அதிமான பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதிலும் இந்தக் கொசுக்கள் இரவை விட பகலில் கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. ஆகவே இந்தக் கொசு உற்பத்தியை தவிர்க்க தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், கொசு விரட்டிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த டெங்கு வைரஸ்கள் நான்கு வகைப்படும் DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4. இவற்றில் DENV-2 மிகவும் கொடியது அதிலும், DENV-4 கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
டெங்கு நோயின் அறிகுறிகள்
டெங்கு தொற்றின் அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த 4-7 நாட்களுக்குப் பிறகுதான் தோன்றும் இது 10 நாட்களுக்கு நீடிக்கும். இந்த தொற்றிற்கான பொதுவாக அறிகுறிகள் இவைதான்.
- திடீரென ஏற்படும் 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிக காய்ச்சல்.
- கடுமையான தலைவலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- உடலின் பல்வேறு பாகங்களில் தடிப்புகள்
- சுரப்பிகளில் வீக்கம்
- உடல் வலி, எலும்பு, மூட்டு வலி
- மூக்கில் அல்லது ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல்
- தோலில் எளிதில் சிராய்ப்பு
- தோலின் கீழ் உள்ள நுண்ணிய துளைகள் சிராய்ப்பு போல் தோன்றும்
- உடலில் சோர்வு
- கண் இமைகளுக்குப் பின்னால் வலி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |