தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்: எந்த உணவை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது?
Dengue Fever: நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு என்பது ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் பரவும் வைரஸ் ஆகும். டெங்கு காய்ச்சல் வந்தால், சிறிதளவு கவனக்குறைவும் ஆபத்தாக முடியலாம்.
டெங்கு (Dengue) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும், இதிலிருந்து கவனமாக இருக்க நினைப்பவர்களும் இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
அறிகுறிகள்
டெங்குவில் பெரும்பாலும் அதிக காய்ச்சல் (Fever) காணப்படுகிறது.
தலைவலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகளும் இருக்கும்.
டெங்குவின் மோசமான விளைவு பிளேட்லெட்டுகளில் ஏற்படுகிறது.
பிளேட்லெட்டுகளின் வீழ்ச்சி இறப்பு வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
எதை சாப்பிடலாம்?
டெங்கு காய்ச்சலில் பப்பாளி சாறு உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வைட்டமின்-சி உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது குறைந்த பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது. டெங்கு நோயாளிகள் பப்பாளி சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடிக்க வேண்டும்.
மஞ்சள் (Turmeric) கலந்த பால் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பாலில் மஞ்சள் தூள் சேர்த்து உட்கொண்டால், காய்ச்சல் குணமாகும். அத்துடன் நெல்லிச்சாறு உடலுக்கு வைட்டமின்-ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொடுக்கிறது. இதன் காரணமாக உங்கள் பிளேட்லெட்டுகள் வேகமாக அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய விடயம்
டெங்கு காய்ச்சல் உள்ள போது எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
காபி மற்றும் காரமான உணவை தவிர்க்கவும்
அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
குளிர்ந்த பொருட்களையும் சாப்பிட வேண்டாம்.